இந்தியா

ராகுல் காந்தி ரீ என்ட்ரி.."பாஜகவிற்கு முதல் அடி" உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் | UdhayanithiStalin

ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சென்றது பாஜகவிற்கு மிகப்பெரிய அடி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தனியார்பள்ளியில் 1500 முன்களப்பணியாளர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து போது ராகுல் காந்தி விவகாரத்தில் நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்ன ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1500 முன்களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்..

பின்பு மேடையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.., பகல் முழுவதும் வெளியில் வேலை செய்தாலும் இரவு வீட்டில் வந்து தங்கி தான் ஆக வேண்டும்...அது போல எங்கு சென்று என்ன செய்தாலும் சென்னைக்கு செய்வதில் தனி சிறப்பு... சென்னை என்கிற குழந்தையை குளிப்பாட்டும் தாய் தூய்மை பணியாளர்கள் தான்..

சென்னை சென்னையாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் தூய்மை பணியாளர்கள் தான்

மனதளவில் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள்

நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முக்கிய காரணம் தூய்மை பணியாளர்கள் தான்..

சென்னையில் முதன் முதலாக காலை 2 ,3 மணிக்கு வேலைக்கு செல்பவர்கள் நீங்கள் தான்..கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் தூய்மை பணியாளர்கள் பங்கு ஈடு இணையற்றது...

மக்கள் நலுனுக்காக அரசியல் வாதிகளை விட அதிகமாக உழைப்பவர்கள் தூய்மை பணியாளர்கள் தான்...*சம்பிரதாயம்,சாஸ்திரம் ஜாத,மதம் என்கிற பிரிவினை
குப்பைகளை சமுதாயத்தில் இருந்து அகற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி*

தூய்மை பணியாளர்களுக்கான வேலை ஊதிய உயர்வு என்ற எல்லாவற்றையும் முதல்வர் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

இந்திய ஒன்றியத்திலேயே தூய்மை பணியாளர்களுக்கான எல்லா வசதிகளையும் சரியாக முன்னெடுககும் அரசாக இருக்கிறது.

பேருந்துகளில் செல்லும் போது உங்களுக்கு இலவச வசதி செய்ய பட்டிருப்பதால் நீங்கள் வேலைக்கு செல்லும் போதும் எளிமையாக செல்கிறீர்கள்.

தமிழகத்திலேயே சிறந்த தொகுதி சேப்பக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தான் என்று தயாநிதி மாறன் பேசும் போது சொன்னார் அதற்கு காரணம் இங்கே இருக்கின்ற முன்களபணியாளர்கள் தான்..முதல்வர் உங்களுக்கு துணையாக நிற்கிறார்...நீங்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக முதலமைச்சருக்கு பக்க பலமாக நிற்க வேண்டும்...

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பின் தூய்மை பணியாளர்களோடு அமர்ந்து மதிய உணவு அருந்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...உடன் மேயர் உள்ளுட்டவர்களும் மதிய உணவு அருந்தினார்கள்...

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்,

சகோதரர் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்...

நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றம் சென்றது பாஜகவிற்கு மிகப் பெரிய முதல் அடி

என்று கூறினார்...

00 Comments

Leave a comment