தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் இளைஞர் உயிரிழந்ததாக புகார்

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் இளைஞர் உயிரிழந்ததாக புகார்

காரைக்கால் அருகே ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சடலத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருப்பட்டினம் போலகத்தை சேர்ந்த அஜித் குமார் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், அவரை மருத்துவமனை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை அழைத்து சென்றபோது, அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து இளைஞரின் உடலோடு அங்கு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுத்திய போது அவர்கள் மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

00 Comments

Leave a comment