ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து மருத்துவர்களிடம் செல்போனில் பேசி சஸ்பெண்ட் செய்வதாக கூறி கலங்கடித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென்று ஆய்வு செய்தார். பணியில் இல்லாத மருத்துவரின் செல்போன் நம்பரை வாங்கி அவரது செல்போனில் இருந்து அவர்களுக்கு தொடர்பு கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டார். இதனை தொடர்ந்து, மருத்துவர்கள் கையெழுத்திடும் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment