அரசியல்

ஒரே ஒரு ட்ரம்ப்...எதிரில் 3 இந்திய வம்சாவளியினர், சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு எதிராக 3 இந்திய வம்சாவளியினர் களமிறங்கியுள்ளனர். 2024ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் ட்ரம்ப் மற்றூம் புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் தற்போது விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி மற்றும் ஹிர்ஷ் வர்தன் சிங் ஆகிய மூன்று இந்திய வம்சாவளியினர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ட்ரம்புக்கு கட்சிக்குள் 47 சதவீத ஆதரவும் ரான் டிசாண்டிஸ்-க்கு 19 சதவீத ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில் விவேக் ராமசாமி-க்கு 9 சதவீத ஆதரவு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

00 Comments

Leave a comment