தமிழ்நாடு

ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து குளத்திற்கு கவிழ்ந்த லாரி .!

ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து குளத்திற்கு கவிழ்ந்த லாரி .!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நைலான் கயிறுகளை ஏற்றி வந்த கட்டுபாட்டை இழந்து தடுப்பு வேலியில் மோதி குளத்தில் கவிழ்ந்தது. நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு நைலான் கயிறுகளை ஏற்றி சென்ற லாரி இரணியல் அருகே உள்ள ஆழ்வார்கோவில் நான்கு வழிச்சாலை பகுதியில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்தது. அப்போது இடது புறமிருந்த தடுப்பு வேலியில் மோதிய லாரி சாலையோர குளத்திற்குள் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் கிளினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் லாரியை மீட்கும் பணி நடைபெற்றது.

00 Comments

Leave a comment