தமிழ்நாடு

கும்பகோணம் இராமசாமி கோவில் திருத்தேரோட்ட விழா

கும்பகோணம் இராமசாமி கோவில் திருத்தேரோட்ட விழா

கும்பகோணம் இராமசாமி கோவிலில் இராமநவமியை முன்னிட்டு திருத்தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கிய இராமநவமி திருவிழாவில், நாள்தோறும் இந்திர விமானம், சூரியபிரபை, கருட வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு விதமான வாகனங்களில்
சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஒன்பதாம் நாளான இன்று உற்சவர் இராமபிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணர் சிறப்பு மலர் அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். மேலும் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

00 Comments

Leave a comment