தமிழ்நாடு

பைக் மற்றும் லாரி மீது மோதிய தனியார் பேருந்து சிறிது தூரம் பைக் இழுத்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சி | Private bus collides with bike and truck

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தனியார் பேருந்து ஒன்று பைக் மற்றும் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வெளியாகியது. வீரக்கல் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது உறவினர் ஹரிஹரனுடன் திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். பாரக்கல்லூர் என்ற இடத்தில் அதிவேகமாக பின்னால் வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதி இழுத்து சென்றதோடு மட்டுமின்றி, சாலையில் திரும்பி கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்குடன் பேருந்துக்கடியில் சிக்கி தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்ததை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

00 Comments

Leave a comment