தமிழ்நாடு

தேர்தலை புறக்கணிப்பதாக கையில் துண்டு பிரசுரத்துடன் போராட்டம்

தேர்தலை புறக்கணிப்பதாக கையில் துண்டு பிரசுரத்துடன் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே மதுக்கடையை அகற்ற முன்வராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் கையில் துண்டு பிரசுரத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீரமடை கிராம சாலையோரமாக செயல்பட்டு வரும் மதுபான கடையை மூட வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதானல் ஆத்திரமடைந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து அங்கு சென்ற கண்டாச்சிபுரம் தாசில்தார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 

00 Comments

Leave a comment