news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ''அவதூறு பரப்பும் ஊழல் கட்சி திமுக''
tv

Also Watch

tv

Read this

''அவதூறு பரப்பும் ஊழல் கட்சி திமுக''

இ.பி.எஸ். பேசியது என்ன?

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள், விமான நிலைய விரிவாக்கப் பணிகள், காவிரி - குண்டாறு திட்டத்தை, திமுக அரசு முடக்கி வைத்ததாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலில் 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரையில் பொதுக்கூட்டம்
மதுரை​யில் நடை​பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்​டணி பொதுக்​கூட்​டத்​தில் அதிமுக பொதுச்​ செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி பேசி​ய​தாவது:
தமிழகத்​தில் உள்ள மக்​கள் விரோத ஆட்​சியை அகற்​றவே, தேசிய ஜனநாயக கூட்​டணி அமைக்​கப்​பட்​டுள்​ளது. எங்​கள் கூட்​ட​ணி​யில் மக்​கள் செல்​வாக்​குப் பெற்ற கட்​சிகள் இணைந்​துள்ன. எம்​ஜிஆர், ஜெயலலி​தாவுக்கு தென் மாவட்ட மக்​கள் பக்​க பல​மாக இருந்​தனர். எம்​ஜிஆர், அதிமுகவை தொடங்​கிய​போது திண்​டுக்​கல் மக்​கள​வைத் தேர்​தலில், வெற்​றியைக் கொடுத்து தென் மாவட்ட மக்​கள் ஆதரித்​தனர். அது​போல், வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலிலும் அதிக தொகு​தி​களில் வெற்​றி​பெறச் செய்து அதிமுக ஆட்சி அமைவதற்கு தென் மாவட்ட மக்​கள் துணை நிற்​பார்​கள்.

விஞ்​ஞான முறை​யில் ஊழல்
மத்​திய அரசு நிதி வழங்​க​வில்லை என்று முதல்​வர் மு.க.ஸ்டா​லின் அடிக்​கடி அவதூறுகளைப் பரப்​பு​கிறார். இன்று கூட தமிழகத்​துக்கு ரூ.4,500 கோடி வளர்ச்​சித் திட்​டங்​களை மோடி தொடங்கி வைத்​துள்​ளார். குடும்ப நலன் மட்​டுமே திமுக கட்​சி​யின் நிலைப்​பா​டாக உள்​ளது. 2ஜி ஸ்பெக்ட்​ரம் முறை​கேட்​டில் ரூ.1 லட்​சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்​தனர். சர்க்​காரியா கமிஷன் அறிக்​கை​யில் திமுக விஞ்​ஞான முறை​யில் ஊழல் செய்​த​தாக குறிப்​பிட்​டுள்​ளனர். கடந்த 5 ஆண்டு கால ஊழல் நிறைந்த திமுக ஆட்சி அகற்​றப்பட வேண்​டும்.

11 அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள்
தென் மாவட்​டங்​களுக்கு அதிமுக ஆட்​சி​யில் பல்​வேறு திட்​டங்​கள் கொண்டு வரப்​பட்​டுள்​ளன. 11 அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் அதிமுக ஆட்​சி​யில் கொண்டு வரப்​பட்​டன. திமுக ஆட்​சி​யில் ஒரு மருத்​து​வக் கல்​லூரியைக்​கூட பெற முடிய​வில்​லை. அதிமுக ஆட்​சி​யில் இருந்​த​போது​தான் ‘எய்ம்​ஸ்’ மருத்​து​வ​மனை திட்​டம் மதுரைக்​குக் கொண்டு வரப்​பட்​டது. தற்​போது இந்த மருத்​து​வ​மனை கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அந்த மருத்​து​வ​மனையை வரவி​டா​மல் திமுக தடுக்க பார்த்​தது. மதுரை விமான நிலைய விரி​வாக்​கத்​துக்கு அதிமுக ஆட்​சி​யில் ‘அண்​டர் பாஸ்’ முறை​யில் முயற்​சிகளைச் செய்​தோம். தற்​போது இந்த திட்​டத்​தை​யும் தி​முக அரசு முடக்​கி வைத்​துள்​ளது.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Related Link
''ஊழலில் போட்டி போடும் மினிஸ்டர்ஸ்''

''ஊழலில் போட்டி போடும் மினிஸ்டர்ஸ்''

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

4
8 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved