Also Watch
Read this
By: Manigandan Raja
சமூக நீதி என்றால் பிரதமர் மோடி தான் என்று புகழாரம் சூட்டிய பாமக தலைவர் அன்புமணி, ஜெயலலிதா மட்டும் இல்லை என்றால் 69 சதவீத இடஒதுக்கீடு கிடையாது என்று பெருமிதம் தெரிவித்தார். திமுகவுக்கும், சமூக நீதிக்கும் எள்ளளவு கூட தொடர்பு கிடையாது என்று கடுமையாக சாடியுள்ள நிலையில், மதுரையில் நடைபெற்ற என்.டி.ஏ. மாநாட்டில் அவர் பேசியது என்ன? என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.

மதுரையில் பொதுக்கூட்டம்
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் பேசியதாவது;
தமிழ்நாடு சமூக நீதியின் பிறப்பிடம். ஆனால், 5 ஆண்டு காலத்தில் திமுக அரசு, 100 அடி பள்ளத்தை தோண்டி அதில் முழுமையாக சமூக நீதியை புதைத்துவிட்டது. அதற்கு தமிழக மக்கள் முதல்வரை நிச்சயமாக ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கடந்த ஆறாண்டு காலத்தில் சமூக நீதியில் இந்திய அளவில் பெரிய சாதனைகளை மோடி செய்துள்ளார்.

சமூக நீதி என்றால் பிரதமர் மோடி
பாஜக ஆளும் பீகார் மாநிலத்தின் தான் இந்தியாவில் முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தரவுகளை வெளியிட்டு அதற்கு ஏற்ப சமூக நீதி திட்டங்களை வழங்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது. ஆனால், சமூக நீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் அது நடைபெற்று இருக்க வேண்டும்.

சாதி வாரி கணக்கெடுப்பு
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று, கடந்த 5 ஆண்டு காலத்தில் முதல்வர் ஸ்டாலினை எத்தனை முறை நாங்கள் கேட்டு இருக்கிறோம். இந்த கணக்கெடுப்பு ஏதோ சாதி வாரி கணக்கெடுப்பு இல்லை. உங்களுக்கு பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என வைத்துக்கொள்ளுங்கள். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று சட்டமன்றத்தில் முதல்வர் பொய் சொல்கிறார்.

NDA மாநாட்டில் ஜெயலலிதாவுக்கு புகழாரம்
காவிரி குண்டாறு திட்டம் 60 ஆண்டுகளாக நிறைவேறவில்லை. இந்தியாவிலே தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் 69 சதவீத இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதை பாதுகாத்த ஒரே ஒரு நபர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். அந்த அம்மா இல்லை என்றால் 69 சதவீத இடஒதுக்கீட்டையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கும் இவ்வாறு அன்புமணி பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved