news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news
tv

Also Watch

tv

Read this

கூட்டணியில் அனைவரும் சமம் - இபிஎஸ் திட்டவட்டம்

விஜய் குறித்து விமர்சனம்

23

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பெரம்பூரில் விஜய் போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தொகுதிகள் அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று மார்ச் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;

கேள்வி
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவதாக தகவல் வந்திருக்கிறது. அதிமுக அந்த தொகுதியில் நேரடியாக களம் காணவில்லையா?

இபிஎஸ் பதில்
கூட்டணி என அறிவித்த பிறகு எல்லாவற்றையும் சமமாகத் தான் பார்க்க முடியும். இவர் பெரியவர், அவர் பெரியவர் என்பதெல்லாம் எங்கள் கூட்டணியில் கிடையாது. எல்லா கட்சிக்கும் பலம் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் சேர்ந்தால் தான் வெற்றிபெற முடியும். சிறு துளி பெரு வெள்ளம். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் விருப்பப்பட்ட சின்னத்தில் போட்டியிடலாம். திமுகவைப் போன்று கட்டுப்பாடுகள் எல்லாம் கிடையாது. நாங்கள் ஜனநாயக முறைப்படி செயல்படுவோம்.

கேள்வி
எதிர்ப்பு ஓட்டுக்கள், தவெக கட்சிக்கு போகுமா? சீமானுக்கு போகுமா?

இபிஎஸ் பதில்
பிரதான கட்சி அதிமுக. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கி உள்ள கட்சிகள். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இதனால், திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் எங்களுக்கு தான் கிடைக்கும்.
திமுகவை அகற்ற வேண்டும் என மக்கள் நினைத்து விட்டனர். மக்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு மட்டுமே எதிர்ப்பு ஓட்டு கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்காது. எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Link
அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம்

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை

0
32 mins agoshare
தள்ளுபடி செய்ய கோரிக்கை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved