Also Watch
Read this
கட்சிப் பதவிகளுக்கு தவெக மா.செ.க்கள் பெரும் தொகை வாங்குறதா குற்றச்சாட்டு பரவிட்டு வந்த நிலையில, முதல்வர் விஜய் குடியிருக்கற ஏரியாவிலேயே தவெகவோட மாவட்ட செயலாளரா இருக்கற ஈ.சி.ஆர். சரவணன் மேலயும் அப்படி ஒரு புகார் பாய்ஞ்சிருக்கு.

தவெகவோட எம்.எல்.ஏ.க்கள், ’மா.செ.க்கள் பெரும் தொகைய வாங்கிக்கிட்டு, கட்சிக்கான பொறுப்பாளர்களை நியமிக்கிறாங்க,’ன்னு பரவலா குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்த நிலையில, முதல்வர் விஜய் குடியிருக்கற சென்னை நீலாங்கரையை உள்ளடக்குன சென்னை புறநகர் மாவட்டத்தோட தவெக செயலாளராவும், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ.வாவும் இருக்கற ஈ.சி.ஆர். சரவணன் சமீபத்துல கட்சிப் பதவிகளை கூறு போட்டு வித்திருக்கறதா தவெக நிர்வாகிகள் கொதிக்கத் துவங்கியிருக்காங்க.

வேற கட்சியில இருந்து வர்ற நிர்வாகிகளுக்கான தவெக பதவிகளுக்கு ஒரு தொகையும், தவெகவுலேயே இருக்கறவங்களுக்கு ஐம்பது பர்சண்ட் டிஸ்கவுண்ட்ல பாதி தொகையில பதவிகளையும் கொடுக்குறாராம் சரவணன்.

எப்பவும் இவரு கூட இருக்கற ஆகாய விரும்பியான ஒரு வக்கீல்தான் எல்லா டீலிங்குகளையும் பார்த்துக்கறாராம். கட்சியில எவ்வளவோ செலவுகள் இருக்கு பாஸ், அதையெல்லாம் சமாளிக்கணுமில்லன்னு கட்சிப்பதவிகளின் கட்டணத்துக்கான காரணத்தை கூலா சொல்றாராம் சரவணன்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved