Also Watch
Read this
By: Manigandan Raja

சிறப்பு போஸ்டர் வெளியிட்ட படக்குழு
நடிகர் ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு 'கராத்தே பாபு' படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கணேஷ் பாபு இயக்கத்தில் ரவிமோகனின் 34ஆவது திரைப்படமாக கராத்தேபாபு உருவாகி வருகிறது. சாம்.சி.எஸ் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்தியன்-2 வை தொடர்ந்து உருவாகும் இந்தியன்-3
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன், இந்தியன்-2 படங்களை தொடர்ந்து இந்தியன் மூன்றாம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த 2024ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன்-2 திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றமளித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved