- 54 வயதில் மீண்டும் குழந்தை பெற்றெடுத்த கிரீஸ் நாட்டு பெண்
கிரீஸ் நாட்டை சேர்ந்த 54 வயது பெண், 22 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்த உறைந்த கருமுட்டை மூலம் மீண்டும் குழந்தை பெற்று உலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டபோது உருவான கருமுட்டைகள் ஆய்வகத்தில் உறை நிலையில் பாதுகாத்து வைத்திருந்தார்.
இதன் பிறகு பிறந்த மகன், வாலிப வயதை எட்டிய நிலையில் விபத்தில் உயிரிழந்து விட்டான். எனவே, பாதுகாத்து வைத்திருந்த கருமுட்டையை எடுத்து மீண்டும் கர்ப்பம் தரித்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்புப்படை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். லாஸ்பேலா மாவட்டத்தின் கஷாரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 15 கவச வாகனங்கள் வழக்கமான ரோந்துக்காக சென்று கொண்டிருந்தன.

அப்போது, ஏற்கெனவே அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலில் அணிவகுப்பில் முதலில் சென்றுகொண்டிருந்த வாகனம் தீப்பற்றி எரிந்ததால் 23 பலியாகினர்.
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர உதவி
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கூறியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

- தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், டெல்லியில் நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பின் போது உக்ரைன் விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, உதவி செய்ய தயாராக உள்ளதாக இருவரும் தெரிவித்ததாகவும், அதற்கு புடின் வரவேற்பு தெரிவித்ததாகவும் கூறினார்.