news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க கருத்து

ஜெலன்ஸ்கி எதிர்ப்பு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

உக்ரைனுக்கு புதிய அதிபர் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது

  • உக்ரைனுக்கு புதிய அதிபர் வர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஜெலென்ஸ்கி உலகிற்கு பிரச்சனைகளை ஏற்படுத்த விரும்புவதாகவும், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
  • மேலும், போர் முடிவுக்கு வர ஒப்பந்தம் செய்யாததால், உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவை எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா டீசல் வாங்குவதற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், டிரம்ப் இப்படியொரு கருத்தை கூறியுள்ளார்.

ஐசாயஸ் புயலால் புளோரிடா மாநிலத்தில் கனமழை

  • அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஐசாயஸ் புயலால் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், மின்தடையால் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
  • ஒருசில இடங்களில் 9 அடி வரை வெள்ளம் பெருகக்கூடும் என்பதால் புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா ஆகிய பகுதிகளில் அவசரநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடா, அலபாமா ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜபோரிஜியா உள்ளிட்ட 13 பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதல்

  • உக்ரைனின் ஜபோரிஜியா உள்ளிட்ட பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஜபோரிஜியா நகரம் மற்றும் 13 பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
  • ஜபோரிஜியாவில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டடம் நேரிடையாக தாக்கப்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண ஆளுநர் மிகைலோ செமிகின் தெரிவித்துள்ளார்.


Related Link
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்- ஈரான்

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல்- ஈரான்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெப்போலியன் நடித்துள்ள "அமெரிக்க ஆவி" திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved