போர்ச்சுக்கல் கால்பந்து பெடரேசன், ரொனால்டோவை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. UEFA நேஷன்ஷஸ் லீக்கில் போர்ச்சுக்கல் அணி டென்மார்க்கை எதிர்த்து விளையாட இருந்தது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் முகாமில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, தனது பக்கம் உள்ள நியாயம் குறித்து ரொனால்டோ நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்பெனின் கார்லோஸ் அல்காரஸ், கிரீசின் சிட்சிபாஸ் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர். சீனாவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிபெற்ற அல்காரஸ், 6-க்கு 3, 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவலை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 6-க்கு 3, 6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் லூசியானோ டார்டெரியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.
அபுதாபியில் நடைபெறும் போட்டியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 346 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடியது.
அப்துல் மாலிக் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹ்மத் ஷா 84 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.