news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி

உச்சபட்ச கண்காணிப்பில் டெல்லி

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணி மேற்கொண்டனர்.

S I R Special Intensive Revision மூலம் வாக்குகளை திருடியதாக ஞானேஷ்குமார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பேரணி செல்கின்றனர்.

CHALO DELHI...
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று அக்டோபர் 12ஆம் தேதி, டெல்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்வதாக, CHALO DELHI என்ற கோஷத்தை முன் வைத்துள்ளன.

குற்றச்சாட்டும் மறுப்பும்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடு நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிறுத்த வேண்டும், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

பிற்பகலில் தொடங்கிய பேரணி...
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு டெல்லியின் கன்னாட் பிளேஸ் – பாரகம்பா சாலை சந்திப்பில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒன்று திரண்டனர். அங்கிருந்து உச்சநீதிமன்றத்தை நோக்கி அனைவரும் பேரணியாக சென்றனர்.

கடும் கட்டுப்பாடுகள்
உச்சநீதிமன்றம் நோக்கிய இன்றைய பேரணியை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கையாக படேல் சவுக், ஜன்பத், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட், பாரகம்பா சாலை ஆகிய 6 மெட்ரோ நிலையங்களில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பயணிகள் உள்ளே செல்லவும் வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

டெல்லி காவல்துறை அதிரடி
டெல்லி ஜந்தர் மந்தரில் இனி எந்தவித போராட்டத்திற்கும் அனுமதி இல்லை, போராடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதி பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை டெல்லி காவல்துறை நீக்கியது.

டெல்லியில் இனி 3 இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்தலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி, ராம்லீலா மைதானம், புராரி மைதானம், CBD மைதானங்களில் போராட்டம் நடத்த அனுமதி தரப்பட உள்ளது.

Related Link

"ஜந்தர் மந்தரில் இனி போராட முடியாது"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐ.நா. யுனிசெப் இந்தியா பிரிவு தூதராக ஸ்மிருதி மந்தனா நியமனம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved