news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

டிக்கெட்டு பதிவுக்கு 1.5 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

முன்பதிவு குலுக்கல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ICC World cup

142 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் டிக்கெட்டுக்கு விண்ணப்பம்- ஐ.சி.சி.

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் முன்பதிவு குலுக்கல் தொடங்கி 12 நாட்களில், 142 நாடுகளை சேர்ந்த ரசிகர்களிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் அக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் டெஸ்ட் போட்டி டிரா

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அபுதாபியில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 346 ரன்களும், ஆப்கானிஸ்தான் 240 ரன்களும் எடுத்திருந்தன.

இதனையடுத்து 106 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், 7 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 8 விக்கெட் இழப்புக்கு 346 ரன்களும் எடுத்திருந்த நிலையில், 5-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்து, போட்டி டிராவில் நிறைவடைந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 214 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. டர்பனில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 390 ரன்களும், தென்னாப்பிரிக்கா 264 ரன்களும் எடுத்திருந்தன.

இதனால் 106 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியா, 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 421 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா வெறும் 206 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-க்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது.

Related Link
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்வரேவ் அபாரம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்வரேவ் அபாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜம்மு காஷ்மீரில் AK-47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved