சென்னையில் நடைபெற்ற ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் யாஷ் ‘ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், ரகுல் பிரீத் சிங், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான "சீன்" திரைப்படம்
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இந்த படத்தில் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இந்த படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது.
நடிகர் ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படம்
ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் "கண்ணும் கண்ணும்" என தொடங்கும் பாடல் வெளியாகிறது.
இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும், வைஷ்ணவி சைதன்யாவும் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் என என அறிவிக்கப்பட்டுள்ளது.