news-tamil-logo

3/22/2026, 7:06:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home bigstoriesnews ”இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” கொசு அளவில் ட்ரோன் ...!
tv

Also Watch

tv

Read this

”இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” கொசு அளவில் ட்ரோன் ...!

கொசு அளவில் ட்ரோன்

Posted on: Jun 29, 2025 08:19 AM

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Small drone

தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக சீனா ஒரு படி முன்னே சென்று கொசு சைஸில் ஒரு சின்ன ட்ரோனை வடிவமைத்துள்ளது. இந்த மிகச்சிறிய அளவிலான ட்ரோன் பயன்பாடு என்ன? இதன் சிறப்பு என்ன என்று பார்க்கலாம்...!

சீனாவில் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கழகத்தைச் சேர்ந்த விஞ்சானிகள் தான் மிகச்சிறிய கொசு வடிவிலான ட்ரோனை உருவாக்கி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

0.6 செ.மீ உயரம் கொண்ட இந்த ட்ரோன் கண்களுக்கே புலப்படாத வகையில் இருக்கு.
சிறிய உடல் பகுதி மற்றும் மஞ்சள் நிறத்தில் இரு இறக்கைகள் மற்றும் மூன்று கம்பிகளால் ஆன கால்களை கொண்டுள்ளது இந்த ட்ரோன்.

குறிப்பாக போர்க்களத்தில் உளவு பார்ப்பதற்கு சிறந்த திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் இரு நாடுகளுக்கிடையே போர் மூளூம் போது பெரும்பாலும் ரேடர் மூலம் தான் சுட்டு வீழ்த்தப்படும். ஆனால் இது போன்று கொசுவடிவில் இருக்கும் ட்ரோன்கள், ரேடார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு உளவு பார்க்கும் விதமாக இருகின்றன.

இந்த சிறிய ட்ரோனை வைத்துக்கொண்டு என்ன செய்து விட முடியும் என்று கேட்டால் அங்கு தான் ட்விஸ்டே இருக்கிறது. குறிப்பாக இந்த ட்ரோனில் தகவல் தொடர்பு,சென்சார் மற்றும் பவர் யூனிட்டுகள் இருக்கிறது, அட இது மட்டும் இல்லாம ஸ்மார்ஃபோன் இருந்தாலே போதும் இந்த ட்ரோன்களை இயக்க முடியும்.

பேரிடர் காலங்களில் இந்த ட்ரோன்கள் மூலம் தகவல்களை சேகரிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் முக்கியமான பாஸ்வொர்டுகள் மற்றும் அதிமுக்கிய தரவுகளை திருட வாய்ப்புள்ளது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நார்வே தயாரித்த உள்ளங்கை அளவிலான டிரோன்களைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, கரப்பான் பூச்சி, வண்டுகள் ஆகியவற்றின் வடிவில் டிரோன்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு நிலையில அதற்கு சவால் விடும் வகையில், கொசு வடிவில் டிரோன்களை பறக்க விட்டுள்ளது சீனா.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 25 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved