news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை
tv

Also Watch

tv

Read this

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

ராமநாதபுரம்

34

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Goat sale

சிறப்பு ஆட்டுச் சந்தை :

ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் ஒரிரு நாட்களே உள்ள நிலையில் இராமநாதபுரத்தில் இன்று ரம்ஜான் சிறப்பு ஆட்டு சந்தை நடைபெற்றது . இந்த ஆட்டுச் சந்தையில் மதுரை திண்டுக்கல் சிவகங்கை விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்து குவிந்தன.

வெள்ளாடு செம்மறியாடு என ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக வந்து குவிந்தன பல்வேறு பகுதிகளில் இருந்தும் கறிக்கடை வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்காக வந்திருந்தனர்.

ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் வியாபாரிகள் கொண்டு வந்திருந்த பணத்தை வெளிப்படையாக வெளியில் எடுப்பதற்கு பயந்து கொண்டு வியாபாரம்
நடைபெற்றது.

வழக்கமாக ரம்ஜானுக்கு முந்தைய ஆட்டுச் சந்தையில் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகும் ஆனால்தேர்தல் பறக்கும் படையினருக்கு பயந்து கொண்டு இந்த ஆண்டு எவ்வளவு விற்பனை என்ற தகவலை தெரிவிக்க வியாபாரிகள் மறுத்துவிட்டனர்.

வழக்கத்தை விட ஆடுகளின் விலை 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர் இந்த ஆட்டுச் சந்தையில் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஜமுனாபாரி என்ற ஆடு
விற்பனைக்கு வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது இந்த ஆடு 95 கிலோ கறி இருக்கும் என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

3
11 hrs 51 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved