news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கருப்புக்கொடி காட்டப்படும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் எச்சரிக்கை*...!!*
tv

Also Watch

கருப்புக்கொடி காட்டப்படும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் எச்சரிக்கை*...!!*

Madurai

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Aadhav arjun

ரஜினிகாந்த் ரசிகர்கள் எச்சரிக்கை :

மேலூர் பகுதிகளில் தவெக தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எதிராக கண்டன சுவரொட்டி : ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு விஜய் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் கருப்புக்கொடி காட்டப்படும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் எச்சரிக்கை*...!!*

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தவெக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்தை விமர்சனம் செய்யும் விதமாக பேசிய நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியதற்கு விளக்கம் அளித்ததுடன் அதுகுறித்து ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேலூர் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில், அவரது ரசிகர்கள் மேலூர் நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், தவெக கட்சியின் முதலீட்டாளர், தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறும் ஆதவ் அர்ஜுனாவே, எங்கள் தலைவரைப் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேள் என்றும், ஆகவே கண்டிக்காத தாவிக்க தலைவர் விஜய்யா அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும்,.

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்ற வாசகத்துடன், நடிகர் ரஜினிகாந்த் கோவமாக இருப்பது போன்றும், ஆதவ் அர்ஜுனா வாயில் பிளாஸ்திரி போடப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட பொறுப்பாளர். மேலூர் ராஜபாண்டியன் கூறும்போது.

தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டே ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடும் முடிவை மாற்றிக் கொண்டு அதுகுறித்து பகிரமாகவே தெரிவித்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு இன்றுவரை நாங்கள் அவர் பின்
தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்.

இது குறித்து எதுவும் அறியாத விதமாக தவெக ஒருங்கிணைப்பாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவின் மிரட்டல் காரணமாக ரஜினிகாந்த் அரசியலில் இருந்து பின் வாங்கினார் என்று தற்குறி தனமாக பேசியுள்ளார். அதற்கு பல்வேறு தலைவர்களும் எதிரியிற்கு தெரிவித்த நிலையில் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு தற்குறிகளின் தலைவராக உள்ள விஜய் இதுவரை எந்தவிதமான கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அவரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தவெக தலைவர் விஜய் மேலூர் சட்டமன்ற தொகுதியில்
எங்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டாலும்.

அதற்கு எதிராக மேலூர் ரஜினிகாந்த நற்பணி மன்றம் சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதேபோல் அவர் வருத்தம் தெரிவிக்கும் வரை இந்த போராட்டங்கள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

Related Link

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved