Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 04:00 PM
By: Manigandan Raja

கஞ்சா கடத்திய 3 பேர் கைது :
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகள் மெற்கொண்டு வருகின்றனர் நேற்று நாகர்கோவில் வடசேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் படி.
தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட தக்கலை மதுவிலக்கு பிரிவு போலீஸார் புதன்கிழமை மாலை வடசேரி பகுதியை சேர்ந்த மகேஷ் மற்றும் பிரவின் மனோகர் ஆகிய இரு இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில் இருவரும் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த ஜெரின் ஜோஸ் என்பவருடன் கேரளாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாகவும் ஜெரின் ஜோஸ் தற்போது கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வர சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார்.
கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் இன்று காலை தக்கலை மதுவிலக்கு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது
ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் டிராவல் பேக்குடன் வந்த ஜெரின் ஜோஸ் ஐ மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டதில் டிராவல் பேக்கில் கஞ்சா இருப்பது தெரிய வந்த
நிலையில் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் நேரில் விசாரணை நடத்தியதில் ஜெரின் ஜோஸ் கேராளாவில் இருந்து ரூ 11 லட்ச ரூபாய் மதிப்பிலான 21 கிலோ உயர் ரக கஞ்சாவை
டிராவல் பேக்கில் மறைத்து வைத்து ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்ததும் வரும் வழியிலேயே சப்ளை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்து சிறையிலடைத்த தக்கலை மதுவிலக்கு பிரிவு போலீஸார் 21 கிலோ கஞ்சா மற்றும் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் இந்த வருடம் மூன்று மாதத்தில் 53 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும் எனவும்.
கஞ்சா விற்பனை செய்வோர் மீதும் பயன்படுத்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏற்கனவே கழிந்த ஒரு வருடத்தில் 282 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு 502 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கஞ்சாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் தொரும் எனவும் எச்சரித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved