news-tamil-logo

3/21/2026, 10:24:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோடை காலம் தொடங்கியதால் மலை கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு
tv

Also Watch

tv

Read this

கோடை காலம் தொடங்கியதால் மலை கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு

தேனி

Posted on: Mar 19, 2026 03:02 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
River Dry

மலை கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு :

தேனி மாவட்டம், வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாடு கடமலைக்குண்டு மயிலாடும்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான உறை கிணறுகளில் இருந்து குடிநீர் வினியோகம்
செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பொய்யாத காரணத்தால், மூல வைகை ஆறு வழக்கத்திற்கு முன்பாகவே வறண்டு மணல்மேடாக மாறி உள்ளது. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உரை கிணறுகளில் படிப்படியாக வறண்டு கொண்டே வருகிறது.

இதனால் கோடை காலம் தொடங்கிய சில நாட்களிலேயே கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க தொடங்கியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு கிராமங்களில் தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில், வறண்டு போன உரைக்கிணர்களை
தூர்வாரும் பணியில் ஊராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உரை கிணறுகளில் இறங்கி தேங்கி இருந்த மணல் படிவங்களை, அள்ளி வெளியே கொட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஒரு மாதம் மட்டுமே குடிநீர் வழங்க முடியும் என்றும், அதன் பின்னர் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அல்லது மாற்று ஏற்பாடுகளை
தான் செய்ய வேண்டும் என்ன ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே வைகை அணையில் இருந்து இந்தப் பகுதிகளுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கிய சில வாரங்களிலேயே
குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved