Also Watch
Read this
By: Manigandan Raja

மகன் பவன் பிறந்தநாளையொட்டி SK அளித்த விருந்து :
சேயோன் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் பவன் பிறந்தநாளையொட்டி படக்குழுவுக்கு சுடச் சுட பிரியாணி விருந்து அளித்து அசத்தினார்.
பின்னர் படக்குழுவினர் அனைவரும் சிவகார்த்திகேயனுக்கு நன்றியை தெரிவித்தனர். தாய்க்கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் சேயோன் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது.
நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியான "பிளாஸ்ட்" திரைப்படம் :

நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியான "பிளாஸ்ட்" திரைப்படம் உலகளவில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏஜிஎஸ் தயாரிப்பில் 10 கோடி ரூபாயில் உருவான இந்த படம், இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் பட்டியலில் இணையவுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த மே 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் புதிய படங்கள் :

உற்சாகத்தில் உள்ளனர். கேரளத்தின் மிகப்பெரிய பண்டிகையான ஓணம் ஆகஸ்ட் மாதம் வருகிறது. இதற்காக ஒருவாரம் வரை விடுமுறை கொண்டாட்டங்கள் இருக்கும் என்பதால், பல திரைப்படங்கள் ஓணம் வெளியீட்டை குறிவைத்து தயாராகி வருகின்றன.
அந்த வகையில், நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான "கலிஃபா", துல்கர் சல்மானின் "I AM GAME", நிவின் பாலி நடித்த "பெத்லகேம் குடும்ப யூனிட்" ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
கிறிஸ்டோபர் நோலனின் "தி ஒடிசி" திரைப்படம் :

கிறிஸ்டோபர் நோலனின் "தி ஒடிசி" திரைப்படத்திற்கான இந்திய ஐமேக்ஸ் முன்பதிவு நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், உருவாகியுள்ள இந்த படத்தில் மேட் டாமன், ஸ்பைடர் மேன் பட நடிகர் டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி உருவாகும் இப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்டதால் இதன் ஐமேக்ஸ் வெளியீட்டைக் காண பலரும் ஆர்வமாக உள்ளனர்.
"அட்டாக்கர்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு :
நடிகர் தனுஷின் மருமகன் பவிஷ் மற்றும் சுந்தர் சி - குஷ்புவின் மகள் அவந்திகா ஆகியோர் இணைந்து நடிக்கும் "அட்டாக்கர்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி, இயக்கியுள்ள திரைப்படத்தை சினிமா மீடியா அண்ட் என்டேர்டைன்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க வாலிபால் விளையாட்டையும், அதனுடன் இணைந்துள்ள உணர்வுகள், சமூக பின்னணி மற்றும் கலாச்சார அடையாளங்களையும் மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved