Also Watch
Read this
By: Manigandan Raja

தீவிர SCRIPT READING-ல் விஜய் சேதுபதி
இயக்குநர் மணிரத்னம் தன்னோட அடுத்த படத்திற்கான வேலைகள முழுவீச்சுல தொடங்கிருக்காரு. தற்போது இந்தப் படத்துல கதாநாயகனா நடிக்குற விஜய் சேதுபதிக்கு தீவிர SCRIPT READING மற்றும் ரிகர்சல் அமர்வுகள் நடந்துட்டிருக்கு.
குறிப்பா, இந்தப் படத்துல விஜய் சேதுபதிக்காக முற்றிலும் வித்தியாசமான வசன உச்சரிப்பு மற்றும் பேச்சு முறையை (Dialogue Modulation) உருவாக்க மணிரத்னம் கவனம் செலுத்திட்டிருக்கறதாவும், கேரக்டரோட தன்மைக்கு ஏத்தமாதிரி அவரோட நடிப்பும், வசன வெளிப்பாடும் இயல்பாவும் தனித்துவமாவும் இருக்கணும்ங்கறதுக்காகத்தான் இந்த ரிகர்சல்கள் நடந்துட்டிருக்கறதா சொல்றாங்க.
இந்த ஒத்திகை அமர்வுகள் படப்பிடிப்பு தொடங்குற வரைக்கும் தொடரும்னும், படத்தோட ஷூட்டிங் ஜூலை 21 முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கறதாவும், தகவல்கள் வெளியாகிருக்கு.
விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் 'திருப்பாச்சி'

இயக்குநர் பேரரசு இயக்கத்துல விஜய், த்ரிஷா, பசுபதி, மல்லிகா, கோட்டா சீனிவாச ராவ், நெல்லை சிவா, M. S. பாஸ்கர், வையாபுரி, தேனி குஞ்சரம்மாள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிச்சிருந்த 'திருப்பாச்சி' திரைப்படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுருந்துச்சு.
இந்த நிலையில், *இனிமே நம்ம கிட்ட பேச்சே இல்ல வீச்சு தான்* என்று குறிப்பிட்டு 'திருப்பாச்சி' படம் விரைவில் ரீ-ரிலீஸ்ஸாக போறதா படக்குழு ஒரு பதிவை வெளியிட்டிருக்காங்க. ஏற்கனவே ஜனநாயகன் வர்ற 23-ம் தேதி வெளியாகப் போற நிலையில், இப்போ வெளியாகிருக்குற திருப்பாச்சி பதிவு முதல்வர் விஜய் ரசிகர்கள் மத்தியில புது VIBEஐ கிரியேட் பண்ணியிருக்கு.
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

வெங்கி அட்லூரி இயக்கத்துல சூர்யா நடிப்புல உருவாகி வர்ற 'விஷ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படததோட இரண்டாவது சிங்கிள் இந்த வாரம் வெளியாகப் போறதா தகவல் வெளியாகியிருக்கு.
இந்தப் பாடலோட சிறப்பம்சமா, பாடல் வரிகளை கென் கருணாஸ் எழுதிருக்கிறாரு. மேலும், இந்த பாடலை நடிகர் சூர்யாவே பாடியிருக்கறது பாடலின் சிறப்பம்சமா ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுது. ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில இரண்டாவது சிங்கிலும் இசை ரசிகர்களின் பிளேலிஸ்டுல இடம்பிடிக்கும்னு எதிர்பார்க்கப்படுது.