சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, 'படையப்பா' திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரஜினியின் திரையுலகப் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வரும் 12ம் தேதி, 4கே தரத்தில் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்வதாக, சவுந்தர்யா ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.