நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படம், வரும் 31ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் காதல், நகைச்சுவை, சண்டை என அனைத்து கமர்சியல் அம்சங்களுடன் வெளியான இந்தப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 100 கோடியை கடந்தது. இந்நிலையில் வரும் 31ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.