பொங்கலுக்கு வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் "தலைவர் தம்பி தலைமையில்" திரைப்படம் 31 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் தற்போது வரை மூன்று மடங்கு லாபம் பார்த்துள்ளதாகவும், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஜீவாவுக்கு நல்ல வெற்றி திரைப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். Related Link வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற ஊராட்சி செயலாளர் உயிரிழப்பு