news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews நட்டி நட்ராஜ் நடித்துள்ள TN 2026 படம்
tv

Also Watch

tv

Read this

நட்டி நட்ராஜ் நடித்துள்ள TN 2026 படம்

TN 2026

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தமிழ் சினிமா

நடிகர் தனுஷ் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம் :

நடிகர் தனுஷ் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம் என நடிகை மமிதா பைஜு புகழாரம் சூட்டியுள்ளார். தனுஷுடன் கர திரைப்படத்தில் நடித்து வரும் மமிதா பைஜு, அவருடன் இணைந்து நடித்ததில் பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

குறிப்பாக துணை நடிகர்களுக்கு தனுஷ் கொடுக்கும் சவுகரியுமான சூழல் வேற லெவெல் என்றும் உணர்ச்சிபொங்க தெரிவித்தார். கர படத்தின் மூலம் முதல் முறையாக கிராம பெண் கதாபாத்திரத்தில் நடித்ததாகவும் அந்த லுக் மற்றும் ரோல் தனக்கு மிகவும் நன்றாக பொருந்தியுள்ளதாகவும் மமிதா பைஜு தெரிவித்துள்ளார்.

சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்த நடிகை தமன்னா :

புது திரைப்படங்களில் நடிப்பதன் மூலம், ஒவ்வொரு முறையும் தாம் மீண்டும் புதிதாக திரைப்பயணத்தை தொடங்குவதுபோல் உணர்வதாக நடிகை தமன்னா தெரிவித்தார். நடிகைகளுக்கு இத்தகைய வாய்புகள் கிடைப்பது அரிது என அவர் கூறினார்.

சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருப்பது பற்றி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, மக்கள் தனக்குத் தொடர்ந்து கொடுத்து வரும் அன்பை, தாம் அவர்களுக்கு எவ்விதத்தில் திரும்பச் செலுத்தலாம் என்பதற்கான வழிகளை தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

நட்டி நட்ராஜ் நடித்துள்ள TN 2026 படம் :

நட்டி நட்ராஜ் நடித்துள்ள TN 2026 படத்தின் செகண்ட் சிங்கிளான ஹே அலங்கரி என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா, பிரியங்கா பாடியுள்ளனர். பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார்.


சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில், விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ராக்கா திரைப்படத்தின் தீம் பாடல் வெளியீடு :

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சாய் அபயங்கர் இசையில் உருவாகி வரும் ராக்கா திரைப்படத்தின் தீம் பாடல் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 தி ரூல் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.

Related Link
இணையத்தில் வெளியான 'ஜனநாயகன்' அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

இணையத்தில் வெளியான 'ஜனநாயகன்' அதிர்ச்சி மேல் அதிர்ச்சி




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல்2026 சென்னையை அதிர்ச்சியடைய செய்த ஹைதராபாத் அணி

5
20 mins agoshare
சென்னையை அதிர்ச்சியடைய செய்த ஹைதராபாத் அணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved