news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இன்றைய சினி நியூஸ்
tv

Also Watch

tv

Read this

இன்றைய சினி நியூஸ்

டொவினோ தாமஸ்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினி நியூஸ்

10 நாட்களிலேயே உலகளவில் ரூ.2,500 கோடி வசூல் : 


ஹாலிவுட் திரைப்படமான பிராஜெக்ட் ஹெயில் மேரி வெளியான முதல் 10 நாட்களிலேயே உலகளவில் 2,500 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. ரையன் கோஸ்லிங் நடித்துள்ள அறிவியல் புனைகதை அம்சத்தைக்கொண்ட திரைப்படம், கடந்த மாதம் 26-ம் தேதி, இந்தியாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

2025-ல் வெளியான அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் படத்திற்கு பிறகு, இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த முதல் சர்வதேச படம் இதுவாகும்.

டிராகன் திரைப்படத்தில் நடிப்பதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :


ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் டிராகன் திரைப்படத்தில் நடிப்பதாக பரவிய வதந்திகளுக்கு, மலையாள நடிகர் டொவினோ தாமஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டோவினோ தாமஸ், அந்த தகவல்களை மறுத்துள்ளார்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இதுபோன்ற தெலுங்கு திரைப்படங்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்ற அவர், ஒரு தெலுங்கு படத்துக்கு தேதிகளை ஒதுக்கினால், 4 மலையாள படங்களை தாம் இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

தனுஷிற்கு ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த்?

தனுஷின் 56-வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மதுரை மாநகரை சுற்றி நடைபெறும் கதைக்களமாக இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

32 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இணையும் கூட்டணி :

32 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் அறிமுகமாகும் “Lenin Pandiyan” படம் மூலம் தயாரிப்பாளர் T. G. தியாகராஜன் மற்றும் இளையராஜா இணைந்துள்ளனர். இந்த படம் கிராமத்து பின்னணி மற்றும் சமூக உண்மைகளை மையமாகக் கொண்டு உருவாகும் என கூறப்படுகிறது.

Related Link
இன்றைய சினிமா நிகழ்வுகள்

இன்றைய சினிமா நிகழ்வுகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய உலக செய்திகள்

0
3 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved