news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேவாலா கைதக்கொல்லி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை
tv

Also Watch

tv

Read this

தேவாலா கைதக்கொல்லி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை

கூடலூர், நீலகிரி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நீலகிரி யானை

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை :

தேவாலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கைதக்கொல்லி ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் பகுதிகளில் மொட்டை வாள் என்ற காட்டு யானை கடந்த சில நாட்களாக சுற்றித் திரிகிறது இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கைதக் கொல்லி கிராமத்தில் பகல் நேரத்திலேயே யானை நுழைந்தது இதனை கண்ட மக்கள் அச்சமடைந்தனர் மெதுவாக நடந்து வந்த யானை வீடுகளுக்கு கட்டப்பட்டிருக்கும்
தார்பாலிற்குள் குனிந்தபடி நடந்து சென்று சிறிது நேரம் நின்று கொண்டது இதனைக் கண்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கூச்சலிட்டனர்.

மெதுவாக மீண்டும் வரிசையாக இருக்கும் வீடுகளின் அருகே முகாமிட்டு நடந்து சென்றது பின்பு பிரதான சாலைக்கு வந்த யானை பயணியர் நிழற்குடையை தாண்டிச் சென்றபோது பிளிறியதால்
மக்கள் அச்சமடைந்தனர் உடனடியாக கிராமப் பகுதிக்குள் சுற்றி திரியும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Related Link
மூணாறு சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த யானை

மூணாறு சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த யானை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒறையூர் முருகன் கோயிலில் செடல் திருவிழா

1
21 mins agoshare
கடலூர் கோவில் விழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved