news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இன்றைய தமிழ் சினிமா செய்திகள்
tv

Also Watch

tv

Read this

இன்றைய தமிழ் சினிமா செய்திகள்

Kollywood

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cinema news

உறியடி விஜயகுமார் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியீடு :

உறியடி திரைப்படம் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் கவனம் ஈர்த்த விஜயகுமார், நாயகனாக நடிக்கும் அறிவு திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. சத்ய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, டி.இமான் இசையமைத்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி படத்தின் தலைப்பை பிரத்யேக போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது : 

தி கேர்ள் ஃபிரண்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசு சார்பில் வழங்கப்படும் இந்த விருதுக்கு தேர்வானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராஷ்மிகா, அந்த படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் ராகுல் ரவீந்திரன், தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

PRE-BOOKING-ல் ரூ.25 கோடி வசூலித்த துரந்தர்-2 :

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் இரண்டாம் பாகம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், PRE-BOOKING-ல் 25 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகம் ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலான நிலையில், 2ஆம் பாகம் கூடுதலாக வசூலிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்ணியம் பேசும் விஜயிடம் கண்ணியம் உள்ளதா? 

"பெண்ணியம் பேசும் விஜயிடம் கண்ணியம் உள்ளதா?" என பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக மகளிர் தின விழா மேடையில் அது Worth இல்லை என கூறினீர்களே, எது Worth இல்லை தலைவா? தங்கள் மனைவியா? அல்லது திருமண வாழ்க்கையா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Link
பார்த்திபனுக்கு நடிகை த்ரிஷா இன்ஸ்டாவில் கண்டனம்

பார்த்திபனுக்கு நடிகை த்ரிஷா இன்ஸ்டாவில் கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

4
16 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved