news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வீட்டின் பூட்டை உடைத்து 103 சவரன் நகைகள் கொள்ளை
tv

Also Watch

tv

Read this

வீட்டின் பூட்டை உடைத்து 103 சவரன் நகைகள் கொள்ளை

வடலூர், கடலூர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

103 சவரன் நகைகள் கொள்ளை : 

கடலூர் மாவட்டம், வடலூர் நாகேஷ் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (70) இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவரது மனைவி பாசமலர் இவர்களுக்கு சரவணகுமார் என்ற ஒரு மகன் உள்ளார் அவர் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு சரவணக்குமாருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுகன்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

இதனால் மருமகளை பார்ப்பதற்காக வேலாயுதம் மற்றும் மனைவி பாசமலர் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி அமெரிக்கா சென்று உள்ளனர். மேலும் தனது இல்லத்தை அவருடைய தம்பி மனைவி பூங்காவனம் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டின் சாவியை கொடுத்து பாதுகாத்து வருமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல வீட்டுக்கு சென்று வீட்டை சுத்தம் செய்து விட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளார் மேலும் இரவு எட்டு மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க பல்ப் அணைக்கப்பட்டு உள்ளே உடைப்பது போன்று சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்களை அழைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது வீட்டின் பெட்ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 103 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 6 லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டு சோதனை மேற்கொண்டனர்.

இதை அடுத்து கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.

Related Link
டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் முற்றுகை போராட்டம்

டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் முற்றுகை போராட்டம்

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த தடை

1
59 mins agoshare
ஜெய்சங்கர் மறைமுக விமர்சனம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved