Also Watch
Read this
By: Manigandan Raja

கார் மீது வேருடன் பெயர்ந்து விழுந்த ராட்சத மரம் :
இலங்கையில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, கொழும்பு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் மீது ராட்சத மரம் ஒன்று வேருடன் பெயர்ந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் காரினுள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இலங்கையில் கனமழை - 7 மாவட்டங்கள் பாதிப்பு :

இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக, கண்டி, மட்டக்களப்பு உள்ளிட்ட 7 மாவட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
500 மடங்கு வேகமாக இயங்கும் அதிநவீன Processor சிப் உருவாக்கம் :

விண்வெளி ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, தற்போதைய சிப்களை விட 500 மடங்கு வேகமாக இயங்கும் அதிநவீன Processor-ஐ உருவாக்கி நாசா அசத்தியுள்ளது. பூமியிலிருந்து கட்டளைகள் வரும் வரை காத்திருக்காமல், விண்வெளியில் ஏற்படும் சிக்கல்களுக்கு விண்கலன்கள் சுயமாக முடிவெடுத்து இயங்க இந்த Processor உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - லெபனான் இடையிலான பேச்சுவார்த்தை:

இஸ்ரேல் - லெபனான் இடையிலான சமீபத்திய போர் நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே வாஷிங்டனில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இரண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய ரஷ்யா :
உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்து, கடந்த இரண்டு நாட்களில் ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும்; தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களை கொண்டு கடும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved