Also Watch
Read this
By: Manigandan Raja

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டி :
ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டிக்கான இந்திய A அணி அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சரியமளிக்கும் வகையில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்சி இடம்பெற்றுள்ளார். 15 பேர் கொண்ட இந்த அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் சீசனில் மோசம்: 3 கேப்டன்களுக்கு ஆப்பு :

நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாக விளையாடி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ள 3 அணிகளின் கேப்டன்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்எஸ்ஜி, கேகேஆர், டிசி கேப்டன்கள் அக்சர் படேல், ரிஷப் பண்ட், அஜின்கியா ரஹானே ஆகியோர் மீது அந்தந்த அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் அசத்தல் :

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காஃப் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டிக்கு எதிரான ஆட்டத்தில், அதிரடியாக விளையாடிய கோகோ காஃப் 6-க்கு 4, 6-க்கு 3 என்கிற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா அசத்தல் :
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் அசத்தலாக விளையாடி வருகின்றனர். பாங்காங்கில் நடைபெற்று வரும் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் 21-க்கு 12, 21-க்கு 13 என்கிற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜூ சுவான்சென்னை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் ஜோடி காலிறுதிக்கு தகுதி :

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் முகமது ஹைகால்-பிரியன் ஜெரேமே ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக விளையாடிய சாத்விக் - சிராக் ஜோடி 21-க்கு 12, 21-க்கு 19 என்கிற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved