சென்னை மணப்பாக்கம் அடையாறு ஆற்றோரம் நண்பரை ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். பரங்கிமலையை சேர்ந்த நரேஷ், தனது 2 நண்பர்களுடன் மணப்பாக்கம் அடையாறு ஆற்றோரம் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் நரேஷ் தனது நண்பர்கள் கார்த்திகேயன், திலீப் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அங்கிருந்த கயிற்றை கொண்டு நரேஷின் கழுத்தை இறுக்கி ஆற்றில் முழ்கடித்து கொலை செய்தனர்.