விருதுநகர், காரியாபட்டி... சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல். இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கொடூரம். துள்ளத்துடிக்க நடுரோட்டில் கொத்தனார் உயிரிழப்பு. கொத்தனாரை கொலை செய்த கும்பல் யார்? கொத்தனாருக்கும் கொலை செய்த கும்பலுக்கும் என்ன தொடர்பு? நடந்தது என்ன?விருதுநகர்ல உள்ள காரியாப்பட்டி பகுதிய சேந்த ராமசாமி, கொத்தனார் வேலை செஞ்சுட்டு இருந்தாரு. இவருக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கு. இவரோட வீடும், இவரது அண்ணன் வெங்கடேசன் வீடும் பக்கத்துல பக்கத்துல தான் இருக்கு. வெங்கடேசனுக்கு பிரவீன்னு ஒரு மகன் இருக்கான். எந்த ஒரு வேலை வெட்டிக்கும் போகாத பிரவீன், வேண்டாத சேர்க்கையால் கஞ்சா, மதுவுக்கு அடிமையாகி ஊதாரியா ஊர் சுத்திட்டு இருந்துருக்காரு. ஏற்கனவே, கஞ்சா போதையில சிறுவர்கள தாக்குன கேசும் பிரவீன் மேல இருக்குதுன்னு கூறப்படுது. இந்த நிலையில, வெங்கடேசன் குடும்பத்துக்கும் ராமசாமி குடும்பத்துக்கும் ரொம்ப நாட்களாகவே சிறு சிறு பிரச்னை ஏற்பட்டிருக்கு. இதனால ரெண்டு வீட்டுக்காரங்களும் பேசிக்கிறது இல்ல. அண்ணன், தம்பியாவே இருந்தாலும் ரெண்டு பேருமே எதிரும், புதிருமா தான் இருந்துருக்காங்க.இதுக்கிடையில, ராமசாமியோட 3 அடி நிலத்துல வெங்கடேசனோட வீடு இருந்ததா கூறப்படுது. அதனால ராமசாமி அந்த 3 அடி நிலத்த கேட்டு பிரச்னை பண்ணிருக்காரு. இதனால ரெண்டு குடும்பத்துக்குள்ளையும் பிரச்னை பூதாகரமா வெடிச்சுருக்கு. வெங்கடேசனும், ராமசாமியும் அடிக்கடி மாறி மாறி அடிச்சுக்கிட்டு, சண்டை போட்டுக்கிட்டும் இருந்துருக்காங்க. இதுக்கிடையில வெங்கடேசன் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்துட்டாரு. இதனால கொலை வெறியான வெங்கடேசனோட மகன் பிரவீன், 3 அடி நிலத்து பிரச்னையால தான் தன்னோட அப்பா உயிரிழந்துட்டாரு, அப்பா சாவுக்கு ராமசாமி தான் காரணம்ன்னு கொலை வெறியில இருந்துருக்காரு. அதுக்கப்புறம் கஞ்சா போதையில டெய்லி வீட்டுக்கு வர்ற பிரவீன், ராமசாமி குடும்பத்துக்காரங்க கூட டெய்லி பிரச்னை பண்ணிட்டு இருந்துருக்காரு.பிரவீனும் ரொம்ப கஞ்சா, மதுபோதைக்கு அடிட்டாகி என்ன செய்றோருமுன்னு தெரியாம, தன்னோட நண்பர்களோட சேந்து தந்தை சாவுக்கு காரணமான ராமசாமிய ஏதாவது பண்ணனும்னு திட்டம் போட்ருக்கான். சம்பவத்தன்னைக்கு ராமசாமி வேலைக்காக மதுரை நோக்கி போய்ட்டு இருந்தாரு. அப்ப ஆவியூர் சாலையில வழிமறிச்ச பிரவீனும் அவனோட நண்பர்களும் ராமசாமி கிட்ட பயங்கரமா வாக்குவாதம் பண்ணிருக்காங்க. அடுத்து மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்து ராமசாமி கண்மூடித்தனமா ரத்தம் தெறிக்க தெறிக்க வெட்டிருக்காங்க. இதுல சம்பவ இடத்துலேயே ராமசாமி உயிரிழந்துட்டாரு. அடுத்து பிரவீனும் அவரோட நண்பர்களும் ஆவியூர் போலீஸ் ஸ்டேஷன்ல போய் சரண் அடைஞ்சுட்டாங்க. ஆவியூர் பகுதியில கஞ்சா நடமாட்டம் அதிகளவு இருக்கிறதால, இதுதொடர்பா காவல்துறை நடவடிக்கை எடுக்கனும்னு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துருக்காங்க.