38 ஆண்டுகாலம் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ”டி-55” ரக ராணுவ டாங்கி கோவை - ரெட் பீல்ட் இந்திய ராணுவ முகாம் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டிலிருந்து ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் பராக்கிராம் போர்களில் பயன்படுத்தப்பட்டு 2009 ஆம் ஆண்டுடன் ராணுவ டாங்கியின் பயன்பாடு முடிவுக்கு வந்தது.