Also Watch
Read this
தவெக தலைவர் விஜய்யை பார்க்க 500 பேர் வருவார்கள் என்று, காரைக்குடி வேட்பாளர் கூறி உள்ளது பேசுபொருளாகி உள்ளது.

காரைக்குடியில் விஜய்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், நாளை ஏப்ரல் 10ஆம் தேதி தவெக தலைவர் விஜய், வாக்கு சேகரிக்க உள்ளார்.
இந்த நிலையில், தவெக கிழக்கு மாவட்ட செயலாளரும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான டாக்டர் டி.கே.பிரபு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல் துறையினரிடம் அவர்களது கட்சித் தலைவர் விஜய் பரப்பரை மேற்கொள்வதற்காக அனுமதி கடிதம் வழங்கி உள்ளார். அதில் 500 நபர்கள் பங்கேற்க உள்ளனர் என்று கூறி உள்ளார்.

500 பேர் தான் வருவார்களா?
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலை பகுதியில் பிரச்சார இடத்தை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு அனுமதியும் வழங்கி உள்ளனர். இந்நிலையில் சமூக வலை தளங்களில் 500 நபர்களுக்கு எப்படி அனுமதி கேட்டார்கள்? என்று ஒரு கேள்வி உலா வருகிறது.

யார் பொறுப்பேற்பது?
சுமாராக, 15,000 நபர்கள் கூடுவார்கள் என்று வேட்பாளருக்கு தெரிந்திருந்தும் 500 நபர்கள் தான் வருவார்கள் என்று அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டும் இன்றி 500 பேருக்கு அனுமதி கேட்ட நிலையில் காவல்துறையினர் அதற்கு தகுந்தார் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அங்கு அதிகம் பேர் கூடும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே தற்போது பேசு பொருளாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved