news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆஸ்கார்ஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் 950 மாணவர்கள் பங்கேற்பு
tv

Also Watch

ஆஸ்கார்ஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் 950 மாணவர்கள் பங்கேற்பு

சீலப்பாடி, திண்டுக்கல்

66

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL World record

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத்துறை, வதிலை ஸ்ரீஅமிர்தவர்ஷினி இசை நடனக் கலைச் சங்கம் சார்பில், ஆஸ்கார்ஸ் உலக சாதனை நிகழ்ச்சி சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை வகித்தார்.

எம்.பி., சச்சிதானந்தம் கலந்து கொண்டு, உலகசாதனை பரத நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில்
இருந்து 950 பேர், அமெரிக்கா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரத நாட்டிய மாணவர்கள், இசை கலைஞர்கள், பாட்டு மாணவர்கள் ஒருங்கிணைந்து கலையுடன் காணும் பொங்கல் என்ற தலைப்பில் பாரதியார், பாரதிதாசன் பாடல்களுக்கு 20 நிமிடம் பரதம் ஆடினர்.

இது அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட ஆஸ்கார்ஸ் சாதனை அமைப்பால் புதிய உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழ், பதக்கத்தை சாதனை அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் வினோத் வழங்கினார்.

இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ், வத்தலகுண்டு ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள், ஓட்டல், பேக்கரி
உரிமையாளர்கள் சங்கத்தினர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன நிறைவாக வத்தலக்குண்டு ஸ்ரீ அமிர்தவர்ஷினி இசை நடன கலைச்சங்க தலைவர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.

இதையும் படியுங்கள் :  குடிசை அமைத்து இரவில் காவலில் இருந்த விவசாயி பலி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved