ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரிய கால்வாயில் 3வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது. வளைக்காரகுன்று பகுதியைச் சேர்ந்த டிரைவர் மாதவன்-பிரபா தம்பதியின் 3வயது குழந்தை பிரதீப் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அருகே உள்ள ஏரிகால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.