Also Watch
Read this
By: Fyrose Banu

உடுமலையில் மூளைச்சாவு அடைந்த ஆறு வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டநிலையில் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றனர். உடுமலைப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மகன் சிவாதித்யா இந்த சிறுவன் தனது தாத்தா யோகானந்தம் என்பருடன் கடந்த 7 ஆம் தேதி காரில் திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பொன்னேரி என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் காரை ஓட்டி சென்ற தாத்தா யோகானந்தம் உயிரிழந்தார் பலத்த காயமடைந்த சிறுவன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சிறுவன் மூளை சாவு அடைந்ததாக கூறிவிட்டனர்.
விபத்தில் 6 வயது சிறுவன் மூளைச்சாவு
எனவே சிறுவனின் பெற்றோர் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டு கண் மற்றும் தோலை தவிர அனைத்து உறுப்புகளையும் தானமாக வழங்கினர். இதன் மூலம் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றதாக கூறப்படுகிறது. கோவை தனியார் மருத்துவமனையில் சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக் கொண்டனர். இதன்பின் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அனுப்பி வைத்தனர்.
6 பேருக்கு உடல் உறுப்புகள் தானம்
பின்னர் உடுமலையில் உள்ள சிறுவனின் இல்லத்தில் தமிழக அரசு சார்பில் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் மற்றும் வட்டாட்சியர் கௌரி சங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடுமலையில் மூளைச்சாவடைந்த ஆறு வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்ட நிலையில் ஆறு பேர் மறுவாழ்வு பெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved