நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஹாலோ பிளாக் நிறுவனத்திற்குள் கரடி சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. பாப்பான்குளம் கிராமத்தில் புகுந்த கரடி ஒன்று, அப்பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் நிறுவனத்திற்குள் புகுந்து அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தது. மலையடிவாரத்தை தாண்டி தற்போது குடியிருப்புகளுக்கு உள்ளேயே கரடிகள் அதிக அளவில் நடமாடுவதால் அப்பகுதியினர் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். Related Link ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்