news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பத்தூர் அருகே பாலத்தில் கயிறை கட்டிய ஒப்பந்ததாரர்
tv

Also Watch

tv

Read this

திருப்பத்தூர் அருகே பாலத்தில் கயிறை கட்டிய ஒப்பந்ததாரர்

ராச்சமங்கலம், திருப்பத்தூர்

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupathur

கயிறை கட்டிய ஒப்பந்ததாரர் :

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பெருமாள் வட்டம் பகுதியில் சிறிய பாலம் அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ராச்சமங்கலம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சோலை கவுன்டர் மகன் சிவாஜி(45) என்பவர் பாலம் கட்டுவதற்கு டெண்டர் எடுத்து பாலத்தை 15 மாதங்களுக்கு கட்டி முடித்ததாக கூறப்படுகிறது.

பாலத்தை 15 மாதங்களுக்கு முன்பு கட்டியும் பில் வராததால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் சிவாஜி பாலத்தில் யாரும் செல்லக்கூடாது எனக்கு இன்னும் பில் வரவில்லை எனக்கூறி கயிறு போட்டு கட்டி உள்ளார்.

இதனால் பெருமாள் வட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்கு சிரமப்பட்டனர். கைக்குழந்தை வைத்திருந்த பெண்மணி கயிறு தாண்டிய வீட்டிற்கு சென்ற அவல நிலைய ஏற்பட்டது.

பின்னர் தகவரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் பாலத்தில் குறுக்கே கட்டியிருந்த கயிறை அப்புறப்படுத்தினர். பாலம் அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலம் அமைத்து பில் வராததால் பாலத்தில் யாரும் செல்லக்கூடாது என கயிறு கட்டிய ஒப்பந்ததாரரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Related Link
11 ம் தேதி கிருஷ்ணர் - ராதே கோவில் கும்பாபிஷேகம்

11 ம் தேதி கிருஷ்ணர் - ராதே கோவில் கும்பாபிஷேகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 34 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved