கோவில் கும்பாபிஷேகம் : திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், தில்லை நகர் பகுதியில் ஜெயின் சமூக மக்கள் சார்பில் கிருஷ்ணர் - ராதே கோவில் புதியதாக கட்டி உள்ளனர். புதியதாக கட்டிய கோவிலின் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் கோபுர கலசம், கிருஷ்ணர் ராதே உருவ சிலையுடன் உற்சவம் நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான பெண்கள் கும்ப கலசங்களை தலையில் ஏந்தி உற்சாகமாக ஊர்வலம் சென்றனர். கோவில் அருகே கலசங்கள் சென்றபோது கோவில் நிர்வாகிகள் மலர் தூவி கலசங்களை வரவேற்றனர். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். Related Link இந்தியா-கிரீஸ் இடையே பாதுகாப்பு உறவை பலப்படுத்த முயற்சி