கிருஷ்ணகிரி... வீட்டில் அமர்ந்திருந்த இளைஞருக்கு வந்த செல்போன் அழைப்பு. செல்போனில் பேசி முடித்த மறுநிமிடமே அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்ற இளைஞர். தெருவில் நடந்து சென்றபோது நடந்த பயங்கரம். கண் இமைக்கும் நேரத்தில் சுத்து போட்டு கத்தியால் குத்தி கொன்ற கும்பல். உயிருக்கு உயிரான நண்பனே இளைஞரின் உயிரை காவு வாங்கியது ஏன்? பின்னணி என்ன?ஃபிரண்ட் கூப்டான்னு நைட் 11 மணிக்கு வெளிய போன இளைஞர, ஒரு கும்பல் சுத்து போட்டு, கத்தியால குத்தி கொன்ன சம்பவம், அந்த கிராமத்தையே பதற வச்சிருக்கு. கிருஷ்ணகிரி, ஒசூர் பக்கத்துல உள்ள குந்துமாரணப்பள்ளி பகுதிய சேர்ந்தவர் 31 வயசான குருபிரசாத். ரியல் எஸ்டேட் வேலை பாத்துட்டு இருந்த குருபிரசாத்தும், மேக்களகவுணூர் கிராமத்தை சேர்ந்த பாபுவும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸ். ரெண்டு பேரும் ஒன்னா சேந்துதான் ரியல் எஸ்டேட் பிசினஸ பண்ணிட்டு இருந்துருக்காங்க.சம்பவத்தன்னைக்கு, நைட்டு சாப்பிட்டுட்டு உக்காந்திருந்தப்ப, குருபிரசாத்துக்கு ஒரு ஃபோன் கால் வந்திருக்கு. அந்த ஃபோன அட்டண்ட் பண்ணி பேசி முடிச்சதுக்கு அப்புறம், பிரண்ட் அவசரமா கூப்புடுறான், வெளிய போய்ட்டு வந்துடுறேன்னு தன்னோட அம்மாக்கிட்ட சொல்லிட்டு கிளம்பிருக்காரு குருபிரசாத். நைட்டு 11 மணிக்கு மேல, ஃபோன் பண்ணி கூப்பிட்ட நண்பன்கூட பேசிக்கிட்டே ஏரியாவுல நடந்து போயிட்டு இருந்துருக்காரு. அப்ப, தூரத்துல இருந்து யாரோ கூப்புடுற சத்தம் கேட்டுருக்கு. யாரு என்னன்னு திரும்பி பாத்தப்ப, டூவீலர்ல ரெண்டு பேர கைய காட்டிக்கிட்டே குருபிரசாத்த நோக்கி வந்திருக்காங்க.அந்த ரெண்டு பேரும் குருபிரசாத்கிட்ட வந்ததும், ஆவேசமா கைய நீட்டி ஏதோ பேசிருக்காங்க. பதிலுக்கு குருபிரசாத்தும் அவங்க கிட்ட கோவமா ஏதோ பேசிருக்காரு. பேசிட்டு இருந்தப்பவே, அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் திடீர்னு குருபிரசாத்த பிடிச்சு கீழ தள்ளிவிட்டு, அவரு மேல ஏறி உக்காந்து சரமாரியா அடிச்சிருக்கான். அடுத்த நொடியே இருசக்கர வாகனம் கிட்ட நின்னுட்டு இருந்தவனும் குருபிரசாத்கூட இருந்த நண்பனும் சேந்து அவர கண்மூடித்தனமா அடிச்சிருக்காங்க. அதோட, தான் மறைச்சி வச்சிருந்த கத்திய எடுத்த அந்த கும்பல் குருபிரசாத்த சரமாரியா குத்திருக்காங்க.எப்படியாவது உயிர காப்பாத்திக்கணும்னு நெனச்ச குருபிரசாத், தன்னால முடிஞ்ச அளவுக்கு அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு ஓட பாத்துருக்காரு. ஆனா, எங்கையும் ஓட விடாம நாலாபக்கமும் சுத்து போட்ட கும்பல், அவர விரட்டி விரட்டி குத்தி கொன்னுருக்காங்க. குருபிரசாத்தோட கடைசி மூச்சு நிக்குற வரைக்கும் அந்த கும்பல் விடாம பலமுறை ஆக்ரோஷமா குத்திட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்கு. அடுத்து, தகவல் தெரிஞ்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், குருபிரசாத்தோட சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சிருக்காங்க. போலீஸோட முதல் கட்ட விசாரணையில, குருபிரசாத்துக்கும், அவரோட நண்பனான பாபுவுக்கும் இடையில ரியல் எஸ்டேட் பிசினஸ்ல பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பா பிரச்சனை ஏற்பட்டிருக்குது.இந்த பிரச்சனையால கடந்த சில நாட்களுக்கு முன்னாடி கூட ரோட்டுல வச்சு பாபுவுக்கும், குருபிரசாத்துக்கும் பயங்கரமா சண்ட வந்துருக்குது. அப்ப, கூடிய சீக்கிரம் உன் கதைய முடிச்சிடுறேன்னு குருபிரசாத், பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததா சொல்லப்படுது. குருபிரசாத் முந்திக்கிறதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்னு நினச்சு, பாபுதான் தன்னோட நண்பர்களோட சேர்ந்து குருபிரசாத்த கத்தியால குத்தி கொன்னதா கிடச்ச தகவல் அடிப்படையில, தலைமறைவா இருக்குற பாபுவ போலீஸ் தேடிட்டு இருக்காங்க. பாபுவையும் கொலைக்கு உடந்தையா இருந்த ரெண்டு பேரையும் பிடிச்சாதான் முழு விவரம் தெரியவரும்னு காவல்துறை தரப்புல சொல்றாங்க. இதையும் பாருங்கள் - 3 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்