Also Watch
Read this
By: Manigandan Raja

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் மூங்கம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக லதா உள்ளார் அவரது கணவர் சுகுமார் இதனிடையே முங்கம்பட்டு ஊராட்சி பகுதியில் சிமெண்ட் சாலை மற்றும் தண்ணீர் டேங்க் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பணிகள் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு பணிகளுக்கான தொகை இதுவரை வராத நிலையில்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது பணிகள் சரி இல்லை என புகார் மனு வந்துள்ளதால் உங்களுக்கு தரவேண்டிய பணம் காலதாமதம் ஆகுவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் யாரோ கொடுத்த புகாருக்கு எனக்கு பில் தராத நிலையில் தான் வட்டிக்கு பணம் வாங்கி பணிகள் செய்ததாக கூறி இன்று பெட்ரோல் கேனுடன் வந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர் மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசால் மற்றும் அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பெட்ரோல் கேனுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.