news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்
tv

Also Watch

tv

Read this

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

தருமபுரி

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புகையிலை

தருமபுரி மாவட்டம் வழியாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து சேலம், கோயம்புத்தூர், கேரளா போன்ற பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, வெங்கடேஷ்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது பெங்களூர் பதிவெண் கொண்ட பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வண்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, 26 மூட்டையில் 390 கிலோ இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ஓட்டுனரை விசாரணை செய்ததில், ராஜஸ்தானை சேர்ந்த பவன்தேவ் சாத் என்பதும், பெங்களூரில் இருந்து கோயமுத்தூருக்கு குட்கா பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பவன்தேவ் சாத் என்பவரை காவல் துறையினர் கைது செய்து அவர் கொண்டு வந்த 26 மூட்டை குட்கா மற்றும் பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Related Link
குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கம்யூனிஸ்டுகளுடன் திமுக கைகோர்க்கும் என உதயநிதி உறுதி

0
39 mins agoshare
நல்லகண்ணு சிலை திறப்பு விழாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau