news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பட்டியலின நபருக்கு உருட்டுக்கட்டை அடி, தட்டிக்கேட்ட அண்ணிக்கும் அறை
tv

Also Watch

பட்டியலின நபருக்கு உருட்டுக்கட்டை அடி, தட்டிக்கேட்ட அண்ணிக்கும் அறை

மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் அடாவடி

40

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கள்ளக்குறிச்சி அருகே குரைத்தபடியே துரத்திய நாயை, வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்க கூடாதா? என தட்டிக்கேட்ட பட்டியலின நபரை மாற்று சமூகத்தை சேர்ந்த 6 பேர் உருட்டுக்கட்டையால் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தட்டிக்கேட்ட பட்டியலின நபரின் அண்ணியையும் மாற்று சமூகத்தை சேரந்தவர் தாக்கியதால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாய் வளர்ப்பவர்கள்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமம் சரவணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். பட்டியலினத்தை சேர்ந்த இவர் மாற்று சமூகத்தினர் குடியிருக்கும் பகுதியை கடந்துதான் தனது வீட்டுக்கு செல்ல வேண்டும். அதன்படி, இரவு 8.30 மணிக்குமேல் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார் மகேந்திரன். அப்போது, தெருவில் நின்று கொண்டிருந்த ஒரு நாய், இருசக்கர வாகனத்தின் குறுக்கே வருவதுபோல் வந்ததோடு பட்டியலின நபரை பார்த்து குரைத்துள்ளது.

"நாய் வளர்ப்பவர்கள் அதனை கட்டிப்போட்டு வளர்க்க கூடாதா? இரு சக்கர வாகனத்தில்கூட வர முடியவில்லை, தினமும் இதே நிலைதான்," என கூறியதாக தெரிகிறது.

அண்ணிக்கும் அடி
அப்போது, அங்கு போன் பேசிக்கொண்டிருந்த ஜெய கிருஷ்ணன், மகேந்திரனை ஆபாச வார்த்தைகளால் திட்டி அடிக்க பாய்ந்துள்ளார். அதனை பட்டியலின நபர் தட்டிக்கேட்க, ’யாரை எதிர்த்துப் பேசுகிறாய்?’ எனக்கூறி ஜெய கிருஷ்ணன், அவரது உறவினர்கள் முருகன், ரமேஷ், பிரவீன் உள்ளிட்ட 6 பேர் கட்டையால் கொடூரமாக தாக்கினர்.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேந்திரனின் அண்ணி சித்ரா இத்தனைபேர் சேர்ந்து ஒருவரை அடிக்கிறீர்களே? மனசாட்சி இல்லையா? என நியாயம் கேட்டார். அப்போது, சித்ராவையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது.

காவல்துறையில் புகார்
இதில் காயமடைந்த மகேந்திரனும், சித்ராவும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கைது நடவடிக்கை
தொடர்ந்து பேசிய அவர்கள், உருட்டுக்கட்டையுன் தாக்குதல் நடத்திய சாதிவெறி கும்பல் அந்த வழியாக செல்லும்போது ஏற்கெனவே அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளதாகவும், மனிதர்களை மனிதர்களாக பார்க்க வேண்டாமா? எனவும் கேள்வி எழுப்பினர். இதனிடையே, எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜெய கிருஷ்ணனை கைது செய்துள்ள காவல்துறையினர் மற்றவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Link
பெண் நண்பரை  கொ*ற கறிக்கடைக்காரர் கைது

பெண் நண்பரை கொ*ற கறிக்கடைக்காரர் கைது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆட்சிக்கும் கட்சிக்கும் முதல்வரின் சிறப்பு உளவுத்துறை

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved